விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த பாரதப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனுடன் மறைந்த தமிழகத்தின் கல்வி தந்தையான கர்மவீரர் காமராஜர் அவர்களின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் சாத்தூர் நகரத் தலைவர் ஐயப்பன் வட்டாரத் தலைவர் கருப்பையா மற்றும் சாத்தூர் நகர வட்டார இளைஞர் காங்கிரஸ் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.




