விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி கிராமம் வழியாக சாத்தூரில் இருந்து படந்தால் ரெங்கப்பநாயக்கன்பட்டி அழகாபுரி கோபாலபுரம் சங்கரநத்தம் சுப்பிரமணியபுரம் வரை செல்லும் அரசு பேருந்து இன்று வழக்கம் போல பயணத்தை தொடங்கிய நிலையில் இரவார் பட்டி கிராமத்தின் அருகே செல்லும் போது பேருந்து பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

இதனை எடுத்து பஸ்ஸில் இருந்த பயணிகளும் கிராம பொதுமக்களும் பேருந்தை தள்ளி சென்றனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து சரியான நிலையில் பயணிகள் அந்த பேருந்தில் பயணித்தனர்.
தமிழகம் முழுவதும் என்று வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கிய நிலையில் பெண்கள் செல்லும் இலவச பேருந்து பழுதடைந்து நின்ற நிலையில் கிராம பொதுமக்கள் பேருந்துகளை தள்ளிச்சென்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பையும் பேசு பொருளாகவும் ஆனது.




