மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் , TECHNOVA 2026 என்ற தலைப்பில் அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.

இதில் ,சென்னை, மதுரை ,திருச்சி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் தாங்கள் உருவாக்கிய பல்வேறு வகையான பொருட்களை கல்லூரி நிர்வாகத்திடம் அளித்து பாராட்டை பெற்றவுடன், அவர்களை கௌரவிக்கும் விதமாக கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பணம் (ரூ 10,000 / – முதல் ரூ 50, 000 / – வரை) பரிசாக அளித்து கௌரவித்தது.

இதில் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி சார்ந்த மாணவர்கள் தலைவலி, மூட்டு வலி, கால் வலி ,வயிற்று வலி உள்ளிட்ட நோய்களை தீர்ப்பதற்கு காலில் அணியும் ஷூ (shoe) வில் நரம்புகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதனை செயல் விளக்கம் அளித்தனர்.

இதனால் வயதான முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த காலில் ஷூ (Shoe) அணிந்து கொண்டாலோ, நடந்து சென்றாலோ , அமர்ந்து கொண்டாலோ செல்போனில் உள்ள இணையதளம் மூலம் தலைவலி என்றால் அதற்கேற்றவாறு ஷூ (Shoe)வில் அசைவுகள் (vibration)ஏற்பட்டு நரம்புகளில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர் செய்து முழங்கால் வலி, மூட்டு வலி ,தலைவலி உள்ளிட்டவற்றை போக்குவதற்கு உண்டான தொழில்நுட்பத்தை கண்டறிந்து பாராட்டை பெற்றுள்ளனர்.





