• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மறிப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 1, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான சுடுகாடு, நெடுஞ்சாலை – குற்றாலம் ரோட்டில் அருகே அமைந்துள்ளது.

இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று முடிந்து போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சாலை மற்றும் பாலம் போடப்பட்ட போது , சுடுகாட்டுக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது.மேலும் சுடுகாட்டு பாதையை மறித்து 4 வழி சாலைக்காக தோண்டப்பட்ட மண்கள் பாதையை மறித்து மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல கிராமமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.

வயதானவர்கள், குழந்தைகள் என யாரும் அந்த பாதையில் இறங்கி நடக்க முடியாத நிலை உள்ளது. சுடுகாட்டிற்கு செல்லும் வழி மேடு பள்ளமாக இருப்பதால் மேட்டில் இருந்து பள்ளத்திற்கு இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ஆலம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து கூறும் போது,
நேற்று தனது சித்தப்பா இறந்ததாகவும், அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல 4 பேர் சேர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு தூக்கிச் சென்றதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே ஆதிதிராவிடர் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை அமைத்து தர வேண்டும் எனவும்,இல்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.