மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.,

இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருவதாகவும், வத்தலக்குண்டு மற்றும் உத்தப்பநாயக்கணூரை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் தினசரி லாரி உள்ளிட்ட வாகனங்களும் பள்ளங்களில் சிக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.,

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.,
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விரைந்து சரி செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.,




