மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (36) கட்டிட வேலை பார்த்து வருகின்றார், இவருக்கு பிரியதர்ஷினி (28) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 மாத கை குழந்தையும் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது,

இதில் பிரியதர்ஷினி கணவரிடம் கோபித்து கொண்டு தாயார் வீட்டிற்கு சென்றதாகவும், இரு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் மனைவியை சமரசம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த அவரது கணவர் சந்தோஷ் மனைவி உடலை பார்த்து அழுது கொண்டே அருகிலுள்ள பாழடைந்த பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

குடும்பத் தகராறில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் அறிந்து அங்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் இறந்த கணவன் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கணவன் மனைவி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் கணவன் சந்தோஷ் மது போதைக்கு அடிமையான நிலையில் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் இதில் விரக்தி அடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.




