• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை என கோவையில் தவெகவை புகழ்ந்த அமைச்சர் வன்னியரசு..,

BySeenu

Sep 29, 2026

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஒடையகுளம் கிராமத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கை துண்டிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை, அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த 23-ஆம் தேதி ஒடையகுளம் பகுதியில் ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலரின் கணவர் முருகனின் கை வெட்டப்பட்டு துண்டானது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சுமார் 8 மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம், துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் வெற்றிகரமாகப் பொருத்தினர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முருகன், தற்போது நலமடைந்து வருகிறார்.

இந்நிலையில், முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் வன்னியரசு, மருத்துவச் சிகிச்சைக்காக அரசு சார்பில் 6 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் சம்பத்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

.மேலும் இது சார்பாக அமைச்சர் வன்னியரசு கூறுகையில் பொதுவாக கடந்த ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பல தவணைகளில் மருத்துவ செலவுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது இது வரலாற்றுச் சாதனையாகும் என்று கூறினார்