பாஜக முன்னாள் தேசியச் செயலாளரும், பாஜக தேரிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வின் 71வது பிறந்தநாள் முன்னிட்டு அவர் பூரண ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டி அய்யப்பன் கவுண்டர் ஏற்பாட்டில் திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டி பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து டி. சிவசுப்ரமணியன் பழனி கோதைமங்கலம் ஆகியோரின் தலைமையில், திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு அய்யனார் கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, மேட்டுராஜாக்கப்பட்டி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை வந்தடைந்தது.

அங்கு எச்.ராஜா அவர்கள் நூறாண்டு காலம் நோயின்றி பூரண ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து 50. க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியும் , 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

மேலும், கோவில் சுற்றுப்புறப் பிரகாரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





