மதுரையில் பல்வேறு கண்மாய்களில் மொத்தமாக 25,000 பண விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கண்மாயில் கல்லூரி மாணவர்கள் உடன் இணைந்து பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடக்கி வைத்து பண விதைகளை நட்டு வைத்தார். இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது:
மழைக்காலம் நெருங்கி வருகிறது கண்மாய்கள் டூர் வருவதற்கான பணிகள் தொடங்கப்படுமா குறித்த கேள்விக்கு:
பெரும்பான்மையான கண்மாய்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மின்வாரியத்தின் பதிவு எப்படி என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்விக்கு?

நேற்றிலிருந்து இரண்டு நாட்களாக அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் நிகழ்ச்சி ஜெனரேட்டர் தான் பிரச்சனை, இன்று நிகழ்ச்சியில் மின்வெட்டு கூட ஜெனரேட்டர் தான் பிரச்சனை இரண்டு ஜெனரேட்டர் இருந்தது ஒன்றுலிருந்து இன்னொன்று மாற்றும்போது ஏற்பட்டது.
தவறான தகவல்கள் பல இடத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் மின்சாரம் பற்றாக்குறை இருந்தது அதற்கு சரி செய்வதற்காக வெளியே இருந்து வாங்கி உள்ளோம்.
திமுக வேறு எதுவும் கிடைக்காமல் இந்த முக்கியமான பிரச்சனை ஜெம் வீரமணி போன்ற பாலியல் வன்கொடுமைகளை அந்த வழக்கை மூடி மறைக்க பார்த்தது. இதை திசை மாற்றம் வேலையாக எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பிரச்சனை என உள்ளது என்ன சொல்கிறார்கள்.
இன்று காலை நிகழ்ச்சியில் 4 செகண்டில் வந்துவிட்டது. அவர்களிடம் கேட்டதற்கு ஒரு ஜெனரேட்டில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மாற்றம் செய்ததால் வந்தது என சொன்னார்கள்.
இந்த இது போன்ற விளக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் மின்வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளனர். எல்லா புகார்களையும் கையள்வதற்காக தான் கம்பளைண்ட் சென்டர் ஏ ஐ உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு அரசியல் ஆதாயம் தேடுகிறார் விஜய் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு:
எடப்பாடி பழனிச்சாமி இதற்கு மேல் அந்த கட்சியில் இருக்க வேண்டிய நபரே கிடையாது அம்மா புரட்சித்தலைவர் மரபுகளை எடுக்காமல் போக மாட்டார் போல். தயவுசெய்து பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு போகலாம். வீரமணி வழக்கு எந்த திசையில் போனது ஐந்து மாதத்தில் துரிதமாக செயல்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. பலர் கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளனர். அப்போதைய முதலமைச்சருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்பது தான் எங்களுடைய சந்தேகம். இந்த வழக்கு முடியும் வரை நிறைய விஷயங்கள் வரக்கூடும். இரண்டு வருடம் என்ன பேரம் பேசுவதற்காக அதிகாரிகளை போட்டு ஸ்டாலின் முயற்சி செய்தார்.
வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் குறித்த கேள்வி? தவெக அரசு யாராக இருந்தாலும் 100% என்ன தவறு நடந்தாலும் அதிகாரிகள் சென்று ஆராய்ந்து விசாரித்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக வீரமணி வழக்கு தொடர்பாக வெளியே வந்து இது பற்றி பேச வேண்டும்.
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் குறித்து தவெக நிலைப்பாடு என்ன?
எஸ் ஐ ஆர் விஷயத்தில் முதல் முறையாக போராட்டம் பண்ணது தமிழக வெற்றி கழகம் தான் அதில் நிறைய தவறுகள் நடக்கிறது. நிறைய தவறுகள் உள்ளது முறையாக நடத்தி இருந்தால் 120 சீட்டுக்கு மேல் தவெக வெற்றி பெற்றிருக்கும். அப்போதைய திமுக அதிகாரிகளை வைத்து செய்தார்கள் அவர் கண்டிப்பாக ரிசைன் செய்ய வேண்டும் அவர்கள் சரி செய்ய வேண்டும் என்றார்.




