தமிழ்நாட்டில் அரசு பொதுத்தேர்நின் நிறுவனங்கள் 11 எண்ணிக்கையில் உள்ளன அதில் தென் தமிழகத்தில் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக ஆலங்குளம் சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது.

இந்த சிமெண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்ட சமயத்தில் சிமெண்ட் தூசி பரவல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன இதனால் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டதால் உணவு உற்பத்தி நிறுத்தப்பட்டு விலை நிலங்களை சிமெண்டு ஆலைக்கு கல்லமநாயக்கன்பட்டி , பாறைப்பட்டி, தொம்பக்குளம், சுண்டங்குளம்,டி. கரிசல் குளம், புலிப்பாறைப்பட்டி, காளவாசல், கொங்கன் குளம், உள்ளிட்ட சுற்றுவட்டாரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆலங்குளம் சிமெண்ட் வேலைக்கு கொடுத்தனர்.

ஆலையில் சிமெண்ட் உற்பத்தி காரணமாக 2000 தொழிலாளர்கள் நேரடியாகவும் ,5000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும், மேலும் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தினமும் 2000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அரசு சிமெண்ட் தரமாகவும் விலை மிகவும் குறைவாக இருந்ததால் அரசு பணியில் போடப்பட்ட சிமெண்ட் சாலை, அரசு மேம்பாலங்கள், தரை பாலங்கள், அரசு கட்டிடங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டன
சிமெண்ட் தயாரிக்க ஏராளமான சுண்ணாம்பு கற்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுண்ணாம்பு சுரங்கமும் இதை பயன்படுத்துவதற்கு ஏராளமான கல்குவாரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்த ஆலையில் கிடைத்த உபரி லாபத்தை பயன்படுத்தி ஆலங்குளத்தில் ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் டான்செம் ஆங்கிலவழி கல்வி பயிலும் மேல்நிலைப்பள்ளியும் உருவாக்கப்பட்டது.

டான்சன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள், குறைந்த கட்டணத்தில் பயின்று வந்தனர்.
மேலும் அரியலூரில் கூடுதலாக அரசு சிமெண்ட் ஆலையும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டதால் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டது.
ஆலையில் நஷ்டத்தை ஏற்படுத்தி தொழிலாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. டான்செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் மூடிவிட்டனர்.
இதற்கு கன்னடம் தெரிவித்து ஆலங்குளத்தில் ஆளைப் பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டங்களாக 85 கோடி 2012 ஆம் ஆண்டு 110 கோடி 165 கோடி 2015ல் 190 ஓடியன தமிழக அரசு காலையில் நவீனப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தனர் ஆனால் அந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவே இல்லை தனியார் சிமெண்ட் ஆலைக்கு அதிகாரிகள் கொடுத்த ஆதரவால் தமிழக அரசு ரூபாய் ஒரு ரூபாய் கூட ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த ஒதுக்க முயற்சி செய்யவில்லை.
ஆலங்குளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் முறைகளை கொண்டு செல்வதற்கு நிலக்கரி கொண்டு வருவதற்கும் ரயில் வந்து சென்றது. அதுவும் நாளடைவில் நிறுத்தப்பட்டது.

24 மணி நேரமும் வாகனங்கள் ஹோட்டல்கள் செயல்பட்ட ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சிமெண்ட் உற்பத்தி குறைவு காரணமாக மயானம் போன்று காட்சியளிக்கிறது.
மீண்டும் ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீன படுத்தி உற்பத்தி முழுமையாக தொடங்க வேண்டுமென சென்னை தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருக்கு ஆலை பாதுகாப்பு கமிட்டி சார்பில் கோரிக்கை விடப்பட்டது.




