மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.,

இதில் நகராட்சி வார்டு பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக நடைபெறவில்லை எனவும்,

உசிலம்பட்டி நகராட்சி நகர்மன்ற கூட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முறையாக நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டி திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினரும் உசிலம்பட்டி நாகர் மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி உள்ளிட்ட 14 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகர மன்ற கூட்டத்தை நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளை வெளியே செல்ல விடாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

மேலும் நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகளை வெளியே விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படுட்டது.,



