• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மதுரை ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து சோழவந்தான் வழியாக மதுரை ரயில் நிலையம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் தினசரி காலை மாலை என இரண்டு நேரங்களில் சென்று வந்தது பொதுமக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயிலானது காலை மதுரையிலிருந்து புறப்பட்டு சோழவந்தான் வழியாக திண்டுக்கல் சென்றடையும்.

அதேபோல் மாலை 6 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சோழவந்தான் வழியாக மதுரை சென்றடையும் இந்த ரயில் காலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் நிலையில் மாலை திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லக்கூடிய ரயில் ஒரு மாதத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மதுரை சமயநல்லூர் செக்கானூரணி திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் மற்றும் சோழவந்தான் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வணிகர்கள் ஆகியோர் இரவு விரைவாக வீடு திரும்ப மிகவும் உபயோகமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இந்த ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரை செல்லும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்க முடியவில்லை என கூறுகிறார்கள்.

ஆகையால் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மதுரை திருமங்கலம் உசிலம்பட்டி போன்ற நகரத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன பணிகளுக்கு செல்பவர்கள் பணிகள் முடித்து விரைவில் வீடு திரும்புவதற்கும் மீண்டும் திண்டுக்கல் மதுரை ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.