• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

பசியின் கொடுமையை அனுபவித்து பழக்கப்பட்டவன்- கருப்பையா எம்.எல்.ஏ., பேச்சு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் விரிவாக்கம் துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:-ஏழை எளிய மக்களின்குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பசி, பட்டினியை போக்கும் விதமாக மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் 1973ல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பட்டுக்கோட்டை அழகிரி யார் பிறந்த இந்த வாவிட மருதூர் மண்ணிற்கு வருகை தந்து சிறப்பு செய்தார்.அந்த சிறப்பு வாய்ந்த இந்த மண்ணில் பிறந்தவன் நான்.

தற்போது தமிழக முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை திருவான்மியூரில்தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடக்கி வைக்கிறார்.அதே வேளையில் இங்கு நான் மாணவச் செல்வங்களுக்கு உணவு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த முதல் நாளில் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் வழங்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் பசியின் கொடுமையை அனுபவித்து பழக்கப்பட்டவன். எங்கள் வீட்டில் என் பாட்டி சட்டியில் அடிபிடித்த சோற்றை சுரண்டிஎடுத்து தோசை போல கொடுப்பார்.அதை பசியின் வேதனையில் ஆர்வத்துடன் சாப்பிட்டு விடுவேன்.

இன்று நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.என் நிலை ஏழை எளிய மாணவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தாயன்போடு காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் விரிவாக்கம் செய்துள்ளார். அவரை வணங்கி நன்றி தெரிவித்து வாழ்த்துவோம் இவ்வாறு அவர் பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.