• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் மின்சாரம் தாக்கி ஐந்து பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்தில் மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 24, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் ரமேஷ் என்பவர் தனது வாழ்வாதாரத்திற்காக சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 5 பசு மாடுகளை வளர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக சோழவந்தான் ஆண்டியப்பன் மேடு பகுதிக்கு கொண்டு சென்ற நிலையில் வாழை தோப்பில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்சார ஒயரில் இருந்து வந்த மின்சாரம் பாய்ந்ததில் அடுத்தடுத்து 5 பசு மாடுகளும் உயிரிழந்தது.

இதனால் தினசரி 50 லிட்டருக்கு மேல் பால் கறந்து தனது வாழ்வாதாரத்தை கடத்தி வந்த ரமேஷின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாழை தோப்புக்குள் மின்சார வயர் முறையாக பராமரிப்பு இல்லாமல் சென்றதால் அருந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் 5 பசுமாடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மாட்டின் உரிமையாளர் ரமேஷ் உயிர் தப்பிய நிலையில் அவரின் குடும்பம் சொல்ல முடியாத சோகத்திற்கு ஆளாகியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட ரமேஷின் குடும்பத்தினரை இதுவரை அதிகாரிகளோ மக்கள் பிரிதிநிதிகளோ சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேறு தொழிலும் தெரியாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பசு மாடுகளை இழந்த ரமேஷின் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ ரமேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக செல்ல வேண்டும் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள பசு மாடுகள் இழந்த நிலையில் அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இறந்த பசு மாடுகளுக்கு பதில் பசுமாடுகள் வாங்குவதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதனை உடனடியாக செய்ய வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ரமேஷ் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.