விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம்பழையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், நிர்வாகிகள் பொன்னழகு, கார்த்திக், சூர்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பி.திருவேங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிவகாசி, சாத்தூர், வழியாக போதுமான பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கழிவு நீர் வாறுகால் வசதி, மற்றும் காயல் குடி ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த சாத்தூர் எம்எல்ஏ கடற்கரை ராஜ் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



