விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சத்திரப்பட்டியில் வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வஸ்த்ரா கல்லூரியில் பயிலும் பிபிஏ ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் மாணவர்கள் நடத்திய டெஸ்டினா 2கே26 ட்ராவல்ஸ் எக்ஸ்போ நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் டாக்டர். ராகவேந்திரன் தலைமை வகித்தார்.
கல்லூரியின் துணை முதல்வர் மதன்குமார் முன்னிலை வகித்தார். துறை தலைவர் சங்கரநாராயணன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரங்கா ஹாலிடேஸ் மேனேஜிங் டைரக்டர் ரவிச்சந்திரன், நாணயம் டிராவல்ஸ் சேல்ஸ் டைரக்டர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளின், சந்தேகங்ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



