• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சங்கத்தின் இரத்ததான முகாம்..,

ByS. SRIDHAR

Sep 16, 2026

புதுக்கோட்டை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பாக பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சங்கத்தின் தலைவர் Er. N. முத்துக்குமார் தலைமையில் ஐயா நகரில் அமைந்துள்ள கட்ட பொறியாளர்கள் நல அறக்கட்டளை கட்டடத்தில் FACEAT & P கொடியேற்றி , இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வஜித் அறக்கட்டளை நிறுவனர் Dr.S. ராமதாஸ், அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் Dr.S.சரவணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு 23 அலகுகள் இரத்தம் தானமாக வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை Er.P. மதிவாணன் Er.RV.சத்தியமூர்த்தி,Er.C.தங்கமணி செய்திருந்தனர். நிகழ்வின் முடிவில் செயலாளர்.Er.L.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.