• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அம்மையநாயக்கனூரில்அக்னி மாச்சாக்காள் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByPuthar Pandian P

Sep 16, 2026

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அக்னி மாச்சக்காள் அம்மன் கோவில், செல்வ விநாயகர், அழகுமலையான் ஆகிய சன்னிதானத்திலும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல் நாள் கபைதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன, 2வது நாள் யாகசாலை இரண்டாம் கால சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தது இதில் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

3-வது நாள் நேற்று அதிகாலை யாக சாலையில் பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு அக்னி மாச்சக்காள் அம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக நடைபெற்றது.

இந்த விழாவில் நிலக்கோட்டை எம். எஸ். ஏ அய்யனார், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி. செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் தேனி மதுரை திருப்பூர் சேலம், திருச்ச்சி சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.