புதுக்கோட்டை மாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர சித்தி விநாயகர்மற்றும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற புனித திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பஞ்சமுக விநாயகர் அபிஷேக சிறப்புபஞ்சமுக வடிவம்: ஐந்து முகங்களும் பத்து கைகளுடனும் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திரவியங்கள்: பால், சந்தனம், விபூதி, தேன், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அபிஷேகத்தை தரிசிப்பதால் திருமணத் தடைகள் நீங்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும் மற்றும் அனைத்து வகையான இன்னல்களும் விலகும். என்பது மக்களின் நம்பிக்கை பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும்
விபூதி குங்குமம் வழங்கப்பட்டு பிரசாத வழங்கப்பட்டன.








