• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான் அச்சுறுத்தல்! குமரி சுற்றுலா தலங்களில் தடை

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போது வரை, 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..

ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில்  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய தேதிகளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்..

மேலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை தடுக்க பத்பநாதபுரம் அரண்மனை , சர்வதேச சுற்றுலாதலமான குமரிமுனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் சுற்றுலாபயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.