• Tue. Apr 23rd, 2024

அந்தமான் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்…

Byகாயத்ரி

Dec 29, 2021

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற புள்ளிக் கணக்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் உணரப்பட்டு உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இதுபோன்று அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *