புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஓணாங்குடி பதினோறாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எல்கைப் பந்தயம் நடைபெற்றது. போட்டியை ஓனாங்குடி கிராமப் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போட்டியைத் துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில் சிவகங்கை, மானாமதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பெரிய மாடு 13 மாடுகள், சிறிய மாடு 23 மாடுகள் என போட்டியில் கலந்து கொண்டன. இதில் முதல் பெரிய மாடு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியானது ஓனாங்குடியில் இருந்து கடையக்குடி வரை சென்று வர தூரம் எட்டு மைல் கணக்கிடப்பட்டு விடப்பட்டது.

போட்டியில் வெற்றி பெறும் முதல் மாட்டுவண்டி உரிமையாளருக்கு 26,000, இரண்டாம் பரிசு 23 ஆயிரம், மூன்றாம் பரிசு 20 ஆயிரம் என பரிசுத்தொகைகள் பிரித்து வழங்கப்பட்டன. போட்டியினைக் கண்டு ரசித்த ஓனாங்குடி மிரட்டுநிலை, கடையக்குடிப் பகுதிகளில் திரளான பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக சாலை ஓரங்களில் இருபுறமும் நின்று கொண்டு மாட்டு வண்டிப் போட்டியினைக் கண்டுரசித்தனர்.








