• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையினால் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு..!

ByKalamegam Viswanathan

Sep 5, 2026

மதுரை அவனியாபுரம் யாதவா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயம் செய்து வரும் இவர், மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக மாட்டு வண்டியில் மதுரை–திருப்பரங்குன்றம் சாலை உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

மதுரையில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை செய்தது இந்த நிலையில் மழை குறைந்த பிறகு கண்ணன் புல் அறுத்துவிட்டு மாட்டு வண்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவனியாபுரம் காவல் நிலையம் அருகே சாலை ஓரத்தில் இருந்த மின்மாற்றி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,

மின்மாற்றியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மாட்டின் மீது மின்சாரம் பயந்துள்ளது இதில் ஒரு மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு மாடு அங்கிருந்து ஓடிச் சென்றது.

மாட்டு வண்டியை ஓட்டி வந்த கண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதையடுத்து, உயிரிழந்த மாட்டை டாட்டா ஏசி வாகனம் மூலம் அங்கிருந்து மீட்டு, அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.