மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்.,

இந்த பர்னிச்சர் கடையில் இன்று பிற்பகல் தீடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து கரும்புகை வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் கடையை விட்டு வெளியேறினர்.,
கொழுந்துவிட்டு எரிந்த தீ கடை முழுவதும் பரவி கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான கட்டில், பிரிட்ஜ், மெத்தை, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பின் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.,

இச்சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்., உசிலம்பட்டியின் மையப்பகுதியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீவிபத்து ஏற்பட்டது உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.,




