• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில்..,

BySeenu

Sep 1, 2026

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில் நடைபெற உள்ளது.

“எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்” என்ற கருப்பொருளில், வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை, கோவை எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூலில் 3 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.

கல்வி மட்டுமின்றி மன உறுதி, உடல் வலிமை, உணர்ச்சி நல்வாழ்வு, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்களுடன் உரையாடல்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்த மாநாட்டில் இந்திய விண்வெளி வீரர் ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்று மாணவர்களுடன் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும், எழுத்தாளர் சேத்தன் பகத், நடிகரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான ஆஷிஷ் வித்யார்த்தி, தொழிலதிபர் அமன் குப்தா, வரலாற்றாசிரியர் மனு எஸ். பிள்ளை, விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
மாணவர்களின் முயற்சி மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் Studentpreneur Awards 2026 மற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் Inspirational Guru Awards 2026 ஆகிய விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர். மணிமேகலை மோகன் கூறுகையில், “கல்வி என்பது மாணவர்களை தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் மட்டுமே தயார்படுத்துவதாக இருக்கக்கூடாது. தோல்விகளை எதிர்கொள்ளும் மன உறுதி, சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்னம்பிக்கை, மனம் மற்றும் உடலை கவனித்துக்கொள்ளும் விழிப்புணர்வு ஆகியவற்றுடன் அவர்களை வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்” என்றார்.