கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும் உருவாக வேண்டும் என்று குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வனவராயர் வலியுறுத்தியுள்ளதை நிறைவேற்றும் வகையில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்வாகதம் 2026’ நிகழ்ச்சி நடைபெற்றது.
2026-ம் ஆண்டு முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மாணவர்களுக்ளை வரவேற்று அறிமுக நிகழ்ச்சியில் பேசுகையில்
என்னை யார் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்று மாணவர்கள் கேட்பதற்குப் பதிலாக, “நான் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகிறேன்? உலகத்துக்காக என்ன உருவாக்கப் போகிறேன்?” என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்றார் வேலைவாய்ப்பு மற்றும் மதிப்பெண்கள் மட்டுமே வெற்றியின் அளவுகோல்கள் அல்ல என்றும் கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனும், புதியவற்றை உருவாக்கும் திறனுமே எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

பொறியியல் கல்வி என்பது பாடங்களைப் படித்து மதிப்பெண் பெறுவதுடன் முடிந்து விடக்கூடாது. வகுப்பறைகள், ஆய்வகங்கள், தொழில் நிறுவனங்களுடனான தொடர்புகள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையங்கள் ஆகிய அனைத்தையும் மாணவர்கள் தங்களது கற்றலின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவைப் பெறுவதைக் காட்டிலும், அந்த அறிவைத் திறனாக மாற்றிக் கொள்வது முக்கியம் என்றார்.

வேகமாக மாறி வரும் உலகில் மாணவர்கள் தங்களைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், ‘ALIVE’ என்ற அணுகுமுறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஸ்வாகதம் 2026 மூலம் குமரகுருவில் பயணத்தைத் தொடங்கும் 2030-ம் ஆண்டு மாணவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைத் தாண்டி திறன், புத்தாக்கம், தலைமைத்துவம், நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில் தங்களது நான்கு ஆண்டு கல்லூரிப் பயணத்தை அமைத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.




