• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல் காலயாக வேள்வி தொடங்கியது.

பின்னர் இரவு 10 மணி அளவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் விமான கோபுர கலசம் ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்று அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை நான்கு மணி அளவில் விக்னேஸ்வர பூஜை உடன் கோ பூஜை வேத பாராயணம் நடைபெற்று இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது.

தொடர்ந்து மகா பூர்ணாஹீதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கால யாக பூஜை நிறைவு பெற்று புனித தீர்த்த குடங்களுடன் அர்ச்சகர்கள் விமான கோபுரத்திற்கு சென்றனர். அப்போது கருடன் வானத்தில் இப்போ வட்டமிட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் பால் தயிர் சந்தனம் இளநீர் மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பூசாரி வேலுச்சாமி இரும்பாடி காளியம்மன் கோவில் பங்காளிகள் சாமியாடிகள் மற்றும் பிறந்த மக்கள் மாமன் மைத்துனர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக பூஜைகளை மதுரை ஸ்ரீ நாராயண சர்மா தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரும்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.