• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 2பேர் கைது..,

ByS.Ariyanayagam

Aug 26, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பழைய சிலுக்குவார்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பட்டாகத்தியுடன் வந்த ஆவாரம்பட்டியை சேர்ந்த அமர்ஜோதி(26), அருண்(29) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.