• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்..,

BySeenu

Aug 25, 2026

கோவை தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொது செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களின். வழிகாட்டுதல்படி கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் வனித்தாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் அபுதாஹிர் தலைமையில் கேப்டன் அவரது உருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு இனிப்பு மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி கிழக்கு பகுதி குறிச்சி மைதானத்தில் கிழக்கு பகுதி செயலாளர் ரமணா ஜோசப் தலைமையிலும் தெற்கு மாவட்டம் கழகம் சார்பாகவும் கழக கொடியேற்றி இனிப்புகள்,நலத்திட்ட உதவிகள் மற்றும்
300க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட கழக பொருலாளர் வாழை இழை முருகேசன் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் சேலைகள் வழங்கினார். மேலும் பொள்ளாச்சி கிழக்கு நகரம் சார்பாக கிழக்கு நகர செயலாளர் ஹக்கீம் தலைமையில் முதியோர் இல்லத்தில் இனிப்பு வழங்கி அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் கேப்டன் மகேந்திரன் மற்றும் வீராச்சாமி தலைமையில் கேப்டன் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர்க்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.