• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் “கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்”..,

BySeenu

Aug 25, 2026

கோவை, கோவைபுதூர் பகுதியில் கணவன், மனைவி இணைந்து நடத்தி வந்த சட்டவிரோத போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நெட்வொர்க்கைக் குனியமுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தம்பதியைக் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தன் தொடர்ச்சியாக, கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவைபுதூர் பகுதியில் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.

போலீஸார் நடத்திய சோதனையில், அவர்கள் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.
​அவர்களிடம் இருந்து:
​1,400 போதை மாத்திரைகள் 300 கிராம் கஞ்சா
​ஆகியவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவைபுதூர் தொற்றாயன் கோவில் வீதியைச் சேர்ந்த சல்மான் கான் (26) மற்றும் அவரது மனைவி பாத்திமா சஹானா (20) என்பது தெரியவந்தது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து இவர்கள் இந்த போதை மாத்திர விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா ? இவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் யார் ? என்பது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.