விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி வைரமுத்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனது பூர்வீக விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் என 40 மனுக்கள் அளித்தும் இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய விவசாயி வைரமுத்து இதற்கு மேலும் தன்னால் பட்டா கேட்டு போராட முடியாது என்பதால் தனது விவசாய நிலத்தை ஆட்சியரிடமே ஒப்படைத்துவிடுவதாக கூறியபடி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்பாக படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சக விவசாயிகள் அவரை சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விவசாயியின் செயல் தவறானது எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விவசாயியை கடிந்து கொண்டார்.





