விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் 80 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த 80 நியாய விலைக் கடைகளில் 52 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நியாய விலை கடைகளில் உள்ள
POS இயந்திரத்தில் சர்வர் கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரர் களுக்கு முறையாக பொருட்கள் வழங்க முடியாததால் விற்பனையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது
மேலும் இதன் காரணமாக நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வர் கோளாறு விவகாரம் தொடர்பாக சாத்தூர் வட்ட வழங்கல் அதிகாரி சிவானந்தத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் 50க்கு மேற்பட்டவர்கள் சாத்தூர் தாலுகா அலுவலகம் வளாகத்தில் நியாய விலைக் கடையில் உள்ள (POS) இயந்திரத்தை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு POS இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் சாத்தூர் வட்ட வழங்கல் அதிகாரி இல்லாததால் நியாய விலைக் கடை பணியாளர் கள் அலுவலக வாசலில் காத்திருந்து பின்னர் உதவி வட்டாட்சியரிடம் தீபாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரி உறுதி அளித்ததை அடுத்து நியாய விலைக் கடை பணியாளர்கள் பணிக்கு திரும்பி சென்றனர்.




