• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஞானசக்தி தியான பீடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..,

BySeenu

Aug 22, 2026

​ கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள ஞானசக்தி தியான பீடத்தில், உலக மக்கள் நன்மைகாகவும் குடும்பங்களில் சகல தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகவும் மாபெரும் வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது.

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, விஸ்வகர்மா ஜகத்குரு நிலவேம்பு ஸ்ரீ பாபு ஜி சித்தர் சாமிகள் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சர்வ மங்களமும் நிலவவும், மக்கள் நலமுடன் வாழவும் மகாலட்சுமிக்குரிய மூல மந்திரங்களை பாபுஜி சித்தர் சாமிகள் பக்தர்களுக்குக் ஓதிக்காட்டினார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த மந்திரங்களை மனதாரத் திருப்பிச் சொல்லி, தங்களது குடும்பத்தில் உள்ள சகல தோஷங்களும் நீங்கி ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என பக்திச் பரவசத்துடன் சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பெண் பக்தர் ஒருவர் கூறுகையில்,

“கடந்த 6 ஆண்டுகளாகக் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தோம். வரலட்சுமி நோன்பு பூஜையில் கலந்து கொண்டதன் பலனாக, தற்போது கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

​அதேபோலக் குபேரர் பூஜையில் பங்கேற்ற மற்றொரு பக்தர்,

தொழில்துறையில் தமக்குக் கிடைத்த மாபெரும் அற்புதம் மற்றும் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார்.

​விழாவின் முக்கிய நிகழ்வாக, சமூகத்திற்கும் தொழில்துறைக்கும் சிறந்த பங்காற்றிய ஜென்டெக் (Gentech) கம்பெனி சேர்மன் ஞானசேகரன் அவர்களுக்கு ‘உழைப்பாளர் வென்ற விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண் பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும், விழாவிற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பிரம்மாண்ட அன்னதானமும் வழங்கப்பட்டது.

​விழாவிற்கான அனைத்துப் பிரம்மாண்ட ஏற்பாடுகளையும் ஞானசக்தி தியான பீடக் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்து இருந்தனர்.