• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விமானம் செல்வதை பார்த்து சாலை தடுப்பு வேலியில் மோதி சம்பவ இடத்தில் இருவர் பலி..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது மகன் பாண்டித்துரை ( வயது 22) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உடைய சேவைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மாயழகு என்பவரின் மகன் முனீஸ்வரன் (வயது 24) .

முனீஸ்வரன் மற்றும் பாண்டித்துரை இருவரும் நண்பர்கள் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர் மதுரை திருப்பாலை பகுதியில் கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்த அவர்கள் இன்று முனீஸ்வரன் சொந்த ஊரில் திருவிழா நடப்பதால் அதற்கு செல்வதற்காக இன்று காலை புறப்பட்டு சென்றனர் .

எட்டு மணி அளவில் மண்டேல நகர் சின்ன உடைப்பு அருகே விமானம் வருவதை பார்த்துக்கொண்டே சாலை தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த வேலியில் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்.

விபத்து குறித்து அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்த முனீஸ்வரன் பாண்டித்துரை ஆகிய இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.