நற்றிணை: 010
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
பாடல் – பாலை
பொருளுரை:
மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே!; இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்ப்படையை உடைய வலிமிகு சோழப் பெருவந்தர்களே, கொங்கரைப் பணியவைக்கப் பழையனின் வேலைத்தான் நம்பியிருந்தனராம். இந்தப் பழையன், போர் எனும் ஊரின் தலைவர். யானைப்படை கொண்டவர். ஊர்க்கிழவர்கள் துணையின்றி நடுவணரசுகள் வாழ்ந்ததில்லை போலும்.





