• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் ரயில் வரும் நேரத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மதுரை அடுத்து பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கு தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது.

இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சுமார் 5 கோடி மதிப்பில் முடிவடைந்த பல்வேறு திட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் அப்போது ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு நடைமேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதனையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்த நிலையில் ரயில் பயணிகள் செல்லக்கூடிய நடைமேடை துவக்கி வைத்தது முதல் பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் பயன்படுத்தாத நிலையில் மீண்டும் பழையபடி ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வந்தே பாரத் அந்தியோத்யா போன்ற அதி விரைவு ரயில்கள் வரக்கூடிய நிலையில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் தண்டவாளத்தை கடப்பதால் உயிர் சேதம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் ஏற்கனவே சோழவந்தானில் உள்ள பகுதிகளில் இருந்து பசும்பொன் நகர் வாடிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரயில்வே மேம்பாலத்தை மிகக் குறைந்த அளவு பொதுமக்களே பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்தும் செல்வதால் பாரத பிரதமர் தொடங்கி வைத்த திட்டம் பொது மக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் நடை மேடையில் மேலே ஏறி செல்ல முடியாத நிலையில் ரயில் நிலையத்திற்கு வரும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக தானியங்கி மின்தூக்கி கருவிகளும் அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின் தூக்கி எனப்படும் லிப்ட் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பயன்படுத்தாத நிலையில் மத்திய அரசின் பணம் வீணாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகையால் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் தினசரி ரோந்து சென்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

நடை மேடையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் அதுவரை ரயில்வே காவலர்களை நிரந்தரமாக நடைமேடை அருகே பணியில் அமர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற செயல்களால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.