• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு உறுதிமொழி..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

மருத்துவப்பிரிவு – இராஜயோகக் கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் பிர்ஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். பிரம்மகுமாரிகள் தியான நிலைய சேவை ஒருங்கிணைப்பாளர்கள் ராம்ஜி, சுஜாதா, சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். ராம்ஜி அவர்கள் மாணவர்களுக்கு போதையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.

போதையில்லா, ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.