• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவமாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 17, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 முதல் 2001 வரை 9 மற்றும் 10 .11 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட நிகழ்வு அனைவரின் மனதிலும் மிகுந்த நெகிழ்ச்சியை உண்டாக்கியது இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களிடம் ஆசி பெற்றனர் அப்போது தாங்கள் படித்த காலத்தில் ஏற்பட்ட மலரும் நினைவுகளை ஒருவரையொருவர் நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்

முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கினார்கள். ஆசிரியர்களும் தங்களின் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் குடும்பத்தினர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வேதியல் ஆசிரியையாக பணியாற்றிய ஆசிரியை
மீனா தற்போது செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருவதாக கூறியதுடன் தன்னிடம் படித்த மாணவ மாணவிகளின் தற்போதைய உயர்வு குறித்து பெருமைப்படுவதாக கூறினார்

மேலும் அவர் கூறுகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் படித்த மாணவ மாணவிகளை தற்போது சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த நிகழ்வு தனது மனதில் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்றும் கூறினார் மேலும் அப்போதைய காலகட்டத்தில் மாணவ மாணவிகள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்ததாகவும் ஆசிரியர்கள் கண்டித்தாலும் அடித்தாலும் அதை தங்களின் வாழ்க்கை உயர்வுக்கானதாக எடுத்துக் கொண்டதாகவும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அடித்து படிக்க வைக்க வேண்டும் என்று தங்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டதாகவும் கூறினார் ஆனால் இன்றைய காலை கட்டத்தில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானதுடன் சிறிய கண்டிப்பு காட்டினாலும் காவல் நிலையம் வரை செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் தற்போதுள்ள மாணவர்கள் ஒழுக்கத்துடன் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்

மேலும் முன்னாள் மாணவிகள் கூறுகையில்

25 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடன் படித்த சக மாணவ மாணவிகளை மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகளை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது ஒவ்வொருவரின் மனதிலும் நீங்காத நினைவலைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடப்பதற்கான நடவடிக்கைகளை மாணவர்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்

மேலும் படிக்கும் காலத்தில் இரட்டை ஜடை போட்டு பள்ளிக்கு வந்த நாட்களை நினைவு கூறும் வகையில் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்ததாக கூறினார்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த தங்களுக்கு தற்போது 42 வயது ஆகும் நிலையில் அனைவரும் தங்களது குழந்தைகள் மற்றும் கணவருடன்
வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மன நிறைவை தந்ததாக கூறினார்கள்

நிகழ்ச்ச நிறைவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து ஒருவரை ஒருவர் பிரிந்து செல்ல மனம் இல்லாத நிலையில் தங்களது இல்லங்களுக்கு சென்றனர் முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் ஆசிரியர்களை கௌரவித்து அவர்களிடம் ஆசி பெற்ற சம்பவம் விக்கிரமங்கலம் பள்ளியில் அனைவரது மனதிலும் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது