• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,

ByS.Ariyanayagam

Aug 14, 2026

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .
நாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களின் அணிவகுப்பு,கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தாளாளர் அருள் சகோதரி பெட்டி தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் அருட் சகோதரி மைக்கேல் ரூபி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் அரியநாயகம் பங்கேற்றார்.மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர் பேசியதாவது:

திண்டுக்கல்லுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் மிகப்பெரிய நெருங்கிய தொடர்பு உண்டு. 1857 ஆம் ஆண்டு வேலூர் புரட்சி ஏற்படுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல்லில் புரட்சி ஏற்பட்டது. வேலு நாச்சியாருடைய கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டவுடன், வேலு நாச்சியார் திண்டுக்கல்லுக்கு வந்து திப்புசுல்தான்வுடன் அடைக்கலம் ஆகிறார். கோபால் நாய்க்கர் இவர்களுக்கு உதவுகிறார். இவர்கள் சேர்ந்து திண்டுக்கல் பிளான் என்று ஒன்றை உருவாக்குகிறார்கள். இதுதான் சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளமான போராட்டம்.

இந்தப் போராட்டத்தின் மூலம் சிவகங்கை சீமையை 5,000 வீரர்கள் துணையுடன் வேலுநாச்சியார் மீட்டார். இதுதான் வரலாறு. சுதந்திரப் போராட்டத்தில் திண்டுக்கல்லுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மாணவர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றம் நமது முன்னேற்றம் என்பதை மாணவர்கள் நினைத்தால் தான் சமுதாயம் நலம் பெறும்..நாடு நலம் பெறும், என்றார்.