• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆடி அமாவாசை முன்னிட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்..,

ByS. SRIDHAR

Aug 12, 2026

புதுக்கோட்டை மாவட்ட பல்லவன் குளத்தில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு சாந்தநாதர் சுவாமி ஆலய பல்லவன் குளத்தில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தர்ப்பணம் மண்டபத்தில் இன்று புதுக்கோட்டை நகரப் பகுதியில் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மற்றும் தாய் தகப்பன் மற்றும் உடன் பிறந்தவர்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாலை 3 மணி முதல் இருந்து கூட்டம் கூட்டமாக குவிந்து பல்லவன் குளத்தில் தர்ப்பணம் செய்தனர்.

இதனால் அவர்கள் மூதாதையர்கள் ஆசிர்வாதிப்பார்கள் என்று ஐதீகத்துடன் சொல்லப்படுவதால் இதனை கடைபிடித்து வருடம் தோறும் ஆடி அமாவாசை போன்ற முக்கிய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.