புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்னர் கல்லூரியில் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, கலந்துகொண்டு போதைப் பழக்கத்திற்கு ஏதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திர குமார் குப்தா, இ.கா.ப., அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரகாஷ்; அவர்கள், இணை இயக்குநர் மரு.பெரியசாமி அவர்கள், உதவி ஆணையர் கலால் திரு.ஸ்ரீதர் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கூ.சண்முகம் அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பிருந்தா அவர்கள், மாவட்ட மனநல மருத்துவர் மரு.ரெ.கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மரு.இளவரசி அவர்கள் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.






