• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்..,

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் பொது இடங்களிலும் சுற்றித் திரிகின்றன தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலையில்,

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் சுற்றி திரிகிறது. இதனால் இந்த தெரு நாய்களில் சொறி சிரங்குடன் வீடுகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களிலும் பேரூராட்சி அலுவலகப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் அருகில் செல்லும் குழந்தைங்களுக்கும் நாய்கள் மூலம் சொறி சிரங்குகள் பரவி வருவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு மாதத்திற்கு முன்பு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தெரு நாய்களை அப்புறப்படுத்த பேரூராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெரு நாய்கள் கடித்த பொதுமக்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போடுவதற்காக செல்லும் நிலையில் போதிய தடுப்பூசி இருப்பு இல்லை என மருத்துவமனை பணியாளர்கள் கூறுவதாகவும் 5க்கும் மேற்பட்டவர்கள் வந்தவுடன் தடுப்பூசி போடுகிறோம் என அஜாக்கிரதையாக கூறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாய் கடித்த உடன் உடனடியாக தடுப்பூசி போடாவிட்டால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழக்கக் கூடிய அபாயம் இருக்கக்கூடிய நிலையில் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கான தடுப்பூசி போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய் கடிக்கான தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளிலோ தனியார் மருந்தகங்களிலோ கிடைக்காத நிலையில் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களையே நாடி வருகின்றனர்.

ஆனால் போதிய அளவு தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் நாய் கடி பாதிப்பு ஏற்பட்டவர்கள் நோய் முற்றி அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாய் கடிக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது ஆகையால் உள்ளாட்சி அமைப்புகள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நாய் கடிக்கான தடுப்பூசிகளை போதிய அளவு அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.