• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் கீர்த்தனா, கருப்பையா..,

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு அமைச்சர்கீர்த்தனா, கருப்பையா எம்.எல்.ஏ., வாக்கு சேகரித்தனர்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட மூலனூர் ஒன்றியப் பகுதிகளில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் தலைமையில், சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா முன்னிலையில், சோழ வந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் மாவட்ட கழகப் பொருளாளர் ராஜேஷ் கண்ணா, அரியூர் ராதாகிருஷ்ணன், கொரியர் கணேசன்,பங்களா மூர்த்தி, வழக்கறிஞர் அழகேசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமாவுக்குஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

மேலும் புதூர், தங்கமேடு, வடக்கு வாசு நாயக் கர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்ததமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை கேட்டுதேர்தல் பிரச்சாரம் செய்தனர்.உடன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர், பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.