இந்த ஆண்டு பருவ மழை பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் நீர் இன்னும் திறந்து விடப்படவில்லை.
இதன் காரணமாக காவேரி வறண்டு போனது விவசாயிகளின் கண்ணீரில் வேதனையில் உள்ளனர்.

ஏனென்றால் குறுவை நெல் சாகுபடி 93 ஆயிரம் ஏக்கர் குறைந்துவிட்டது. இது ஒரு புறம் செய்தியாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் இதன் தாக்கம் அரிசி அதை தொடர்ந்து காய்கறி, முட்டை ,சிக்கன், மீன், சமையல் எண்ணெய் என அத்தியாய உணவு பொருட்கள் விலைவாசி எல்லாம் இன்றைக்கு விண்ணைநோக்கி சென்று விட்டது .
ஆந்திரா, கர்நாடகாவில் அரிசி உற்பத்தி குறைந்து விட்டதால் நமக்கு விலைவாசி அதிகரித்துள்ளது. அரிசியைப் பொறுத்தமட்டில் கிலோவிற்கு ரூபாய் 8 முதல் 10 வரை விலை உயர்ந்து விட்டது .இதனால் தற்போது 26 கிலோ எடை கொண்ட அரிசி விலை 200 முதல் 250 வரை கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டியது இருக்கிறது.
தற்போது அத்தியாவசிய பொருட்கள் இருந்து த.வெ.க அரசு பொறுப்பேற்ற இருந்து கடந்த 2 மாதங்களாக கடுமையாக உயர்ந்து கொண்டே செல்வதால் ,இதை எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் தமிழ் நாட்டு மக்கள் என்றனர்.

அடுத்த மாதம் சுபமுகூர்த்த திருமண விழாகள் நடைபெறுகிறது .அத்தியாயச பொருட்கள் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது அதோடு தங்கம் ,வெள்ளி போன்ற விலையும் அடுத்தடுத்து உயரக்கூடிய சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆக மொத்தத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போவதால் வரவுகளை செலவுகள் முந்திக்கொண்டு போவதால் எப்படி ஈடுகெட்ட போகிறோம் என்று வழி தெரியாமல் தலியாய் தவிக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
இதில் இந்த விலைவாசி இயற்கையினால் ஏற்பட்டது என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் இது சமன் செய்ய வேண்டிய, சீர்படுத்த வேண்டிய த.வெ.க.அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது, அதான் மக்களின் கேள்வியாக உள்ளது .
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பின்பு மேகதாது பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை, கச்ச தீவு பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் நடமாட்டம்ஃ லாக்கப் டெத் மரணங்கள் இதில் விஜய் தலைமையிலான த.வெக அரசின் அணுகுமுறை வெளிப்படை தன்மையாக இருக்கிறதா?

இந்த ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு த.வெ.க அரசு என்ன தியாகம் செய்தது? ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு என்ன அணுகுமுறை வைத்திருக்கிறார்கள் ஒன்றும் தெரியவில்லை? சட்டமன்றத்திலே பேச்சுவார்த்தை தயார் என்று சொல்கிறார், அண்டை மாநில முதல்வர் வர வேண்டாம் என்று சொல்கிறார், இதில் தலைகுனிவு வந்தால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
ஜீவாதார பிரச்சனைகளில் விஜய்யின் அணுகுமுறை என்ன? வெளிப்படை தன்மையோடு இதை மேற்கொள்கிறார்கள் என்றால் நமக்கு அதில் ஆமாம் என்று சொல்ல தோன்றவில்லை.தலைக்கு மேலே நமக்கு இருக்க கூடிய பிரச்சினைகளுக்கு தவெக கட்சியின் முதல்வர் இதில் அக்கறை காட்டுகிறார் என்றால் இல்லை,
ஏற்கனவே தவெக தொடங்கிய பின்பு மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு கடந்த சட்ட சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் .அதில் 49 பேர்கள் வெற்றி பெற்றார்கள் அடுத்த கட்சியில் வந்தவர்கள் 7 பேர் அமைச்சராக உள்ளார்கள்.
அதேபோல் மாற்று கட்சியில் வந்த தவெக கட்சிக்கு வந்தவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார் .

ஏற்கனவே விஜய் மன்றத்திலிருந்து வந்த நிர்வாகிகளின் பொறுப்புகளையும் புடுங்கி, பறித்து உள்ளனர் . விஜய் ரசிக மன்றத்திலிருந்து உழைத்த நிர்வாகிகளின் பதவியை பறித்து, அதிகார எல்லையை குறைத்து, தவெக கட்சிக்கு அடுத்த கட்சியில் வந்தவர்களுக்கு பதவி வழங்கி கௌரவம் செய்யப்பட்டு இருப்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அது தவெக கட்சியின் மன்ற நிர்வாகிகள் பிரச்சனை என்பதை நாம் விட்டு விட முடியாது. ஏனென்றால் ஜனநாயக தலைவர் என்று சொல்லுகிற முதல்வர் விஜய் தன்னுடைய பெரும்பான்மை நிரூபிப்பதற்கு மாற்று கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் ஆஃபர் கொடுத்து எந்த வகையில் கொடுத்து இருப்பதா ஜனநாயகம்.
அதிமுக என்கிற மாபெரும் ஒரு மக்கள் இயக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, எடப்பாடியாரை முதலமைச்சராக முன்னிறுத்தி வெற்றி பெற்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் ஆஃபர் என்று தமிழ்நாட்டின் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி கொண்டிருக்கிறது.
உங்கள் கட்சியை வளர்ப்பதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் இல்லை ,கவலை இல்லை, வேதனையும் இல்லை உங்கள் கட்சியை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் ஆனால் அடுத்த கட்சி ஆட்களை இழுப்பது, அபகரிப்பது அதற்கு அமைச்சர் ஆஃபர் கொடுப்பது எந்த வகையிலும் ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தான் இப்போது எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது .

தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதிலாக இனி தட்டு தடுமாறி வழி தவறி வந்தவர்களின் தாய் கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றலாமா?
அக்கறை செலுத்த வேண்டிய விஷயங்களுக்கு தள்ளி வைத்துவிட்டு அடுத்து அடுத்த கட்சியைஅபகரிக்க நினைப்பது ,ஒன்றாக இருப்பவர்களை பிரிப்பது, சட்டமன்ற உறுப்பினர்களை பொதுச் செயலாளரின் அனுமதி இல்லாமல் சந்திப்பது அவர்களுக்கு நீங்கள் உதவி செய்கிறோம் என்று ஆசை வார்த்தை காண்பிப்பது ,
நீங்க அதிகாரத்துக்கு வருவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று தங்கள் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பச்சை பொய் பேசுவது, ஏற்கனவே நம்ப வைத்து நடுத்தெருவில் நிறுத்தியது இதெல்லாம் எங்க இதுக்கு முன்பாக தமிழக அரசியல் களத்தில் நடந்திருக்கிறதா மக்கள் இதெல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள்
விஜய் என்ன கடவுளின் அவதாரமா எல்லாவற்றையும் வாய் மூடி மௌனமாக இருக்க முடியுமா எதை செய்தாலும் நன்மைக்கே செய்வார் இன்பத்தை கொடுத்தாலும் துன்பத்தை கொடுத்தாலும் நன்மையை செய்வார் என்று நான் பொறுமையோடு கடந்து செல்வதற்கு விஜய் கடவுள் அவதாரம் அல்ல ?

அடுத்த கட்சியின் விசுவாசமான தொண்டர்களை காவு கொடுப்பதற்கு நீங்கள் காட்டுகிற அக்கறையை குறைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளில் குறிப்பாக மேகதாது பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, விலைவாசி பிரச்சனை, போன்ற பிரச்சனையில அக்கறை செலுத்துங்கள்
.
நீங்கள் பஞ்ச் டயலாக் பேசி மக்களிடம் நம்பிக்கை விதையை ஏற்படுத்தி உள்ளீர்கள். தேர்தல் அறிக்கையில் நீங்கள் சொன்ன திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. ஏற்கனவே மூன்று மாதத்தில் 22 கோடி கடன் வாங்கி விட்டீர்கள் இன்னும் ஒரு லட்சத்து 22 கோடி கடன் வாங்க போகிறீர்கள். தலைக்கு மேல் உள்ள பிரச்சனைகளை வெட்டவெளிச்சமாக நீங்கள் கையாள வேண்டும் ஜனநாயகத்தின் வழியில உங்கள் ஆட்சி சக்கரம் சுழலுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.





