• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா 700 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 2000 பேருக்கு பிரியாணி விருந்து..,

ByPrabhu Sekar

Aug 9, 2026

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் 2000 பேருக்கு அசைவ விருந்து பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

காமராஜர் நற்பணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் S.அன்பு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் 700 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் A. ராஜ்மோகன், நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜரின் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதங்களையும் சுட்டிக்காட்டி, மறைமுகமாக விமர்சனம் செய்தது நிகழ்வில் கவனம் பெற்றது.

இந்த விழாவில், தமிழக வெற்றி கழகத்தின் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் M. அருள் பிரகாசம், காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு பொதுச் செயலாளர் T. பென்னட் ஜான்சன், தமிழக நாடார் சங்கத் தலைவர் J. முத்து ரமேஷ், டாசியோவா தலைவர் வி. நித்தியானந்தன், டான்சியா பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் ஒரு பகுதியாக, 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து பிரியாணி வழங்கப்பட்டது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பெருந்தலைவர் காமராஜரின் சேவைகளையும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தனர்.