• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நீதிமன்ற வாய்தாவுக்கு சென்று வீடு திரும்பிய நபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!

ByKalamegam Viswanathan

Aug 5, 2026

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்ற குதி முருகன் என்பவர் 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன்பாக அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடிரென முருகனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொலை நடந்த பகுதியில்விசாரணை மேற்கொண்டுமோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம்மோப்பநாய் சென்று திரும்பியதுபின்பு உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் உயர் அதிகாரிகள் இந்த கொலைசம்பந்தமாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாகஅந்தப் பகுதியில் உள்ள சிந்தாமணி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே முருகன் என்ற குதி முருகன்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.