பழனியில் 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதில் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஊக்கத்தொகை, தங்க நாணயத்துடன் அசல் தொகை முழுமையாக திருப்பி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதை உண்மை என நம்பி மதுரை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ரூ.15 கோடி முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.அதோடு நிறுவனமும் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட நபர்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் நிர்வாகி செந்தில்குமார் உட்பட 4 பேரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர். அதேநேரம் வழக்கில் தொடர்புடைய பழனியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவர் திருச்செந்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.




