• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பயிர் கடன் தள்ளுபடி எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு எம்எல்ஏ கார்த்திகேயன் பதில்..,

ByKalamegam Viswanathan

Sep 18, 2026

மதுரை சுற்றுச்சாலை வேலம்மாள் ஜடா ஹாலில் இரண்டு நாள் ஒருங்கிணைந்த விவசாய தொழில் நுட்ப கண்காட்சி துவங்கியது விழாவிற்கு மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் .

விவசாய தொழில் நுட்ப கண்காட்சியில் அனைத்து விவசாய பொருட்கள்
வர்த்தக சங்க தலைவர் சரத்தினவேல், தமிழ்நாடு உணவுப் பொருள் விற்பனையாளர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ் மதுரை உணவு தானிய உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வேல்சங்கர் ,வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பனையூர் வேலு,முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், நிலையூர் கம்பிக்குடி விவசாயிகள் சங்கம்,தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மதுரை கிழக்கு MLA கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: UNITED AGRITECH 2026 ன் 20வது கண்காட்சியை தொடங்கி வைத்ததில் உள்ளபடியே பெருமை அடைகிறேன். கண்காட்சியை சுற்றி பார்த்தேன் விவசாயிகளுக்கு பெரிதும் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் கண்காட்சியாக உள்ளது. விவசாயத்தில் இன்றைக்கு உள்ள தொழில் முன்னேற்றத்தை தெரிந்து கொண்டு பண்டைய தொழில் முறையை விடுத்து இன்றைக்கு இருக்கும் சூழல் ஏற்றார் போல் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு உண்மையாக பயனடைவார்கள்.

எதிர்க்கட்சி என்றாலே குறை சொல்ல தான் செய்யும் மக்கள் அனைவரும் பயன் அடையக்கூடிய ஆட்சி இது 100% தூய்மையான, நேர்மையான ஆட்சி வெளிப்படை தன்மையுடைய ஆட்சி என மக்கள் அனைவரும் பாராட்டு கொண்டிருக்கின்றனர். கடந்த அறுபது ஆண்டுகளில் நடந்த ஆட்சியில் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டு அதைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு நிறைய உள்ளது. அதெல்லாம் பேசுவதற்கு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை மக்களுக்கு நல்லது செய்வதற்காக வந்துள்ளோம் நல்லபடியாக ஆட்சி கொடுப்போம் மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முயற்சி செய்வோம் என கார்திகேயன் MLA கூறினnர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் பேட்டி:

பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரிப்பதால் உலகம் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள்

அதனால் விவசாய பெருமக்கள் இடு பொருள் நல்ல முறையாக பயன்படுத்துவதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும். இயற்கை விவசாயத்தை போற்றி வளர்க்க வேண்டும்.

ஆள் பற்றாக்குறையை போக்க பண்ணை இயந்திரங்கள் பயன்படுத்தி விவசாயத்தை பெருக்குவதற்கு போன்றவையில் கண்காட்சியில் உள்ளது .இதனை மதுரை மட்டுமல்ல தென் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழக இயக்குனர் முருகன் கூறினார்.