விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது .

வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் S அசோக்குமார் k ரவிக்குமார் மற்றும் எவரெஸ்ட் பைனான்ஸ் S ஆனந்த் அன்னலட்சுமி பயர் ஒர்க்ஸ்
T பெரியசாமி ஊர் நாட்டாமை கிருஷ்ணன் பாலாண்டி செல்வகுமார் உள்பட விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




