• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு..,

BySeenu

Jul 27, 2026

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய லேண்ட்மார்க் ஷோரூமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பகுதி மேலாளர் வினீத் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விக்டரி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்குதாரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், சினி வினோத், பயாஸ் அகமது மற்றும் தலைமை செயல் அதிகாரி வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கே.வி.பி. ஆட்டோ கார்ப் எல்.எல்.பி. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை டீலர் பி. கனகராஜ் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பணிமனை , உதிரிபாகங்கள் விற்பனை மையத்தை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பிராந்திய மேலாளர் எஸ். மதன் திறந்து வைத்தார். முதல் வாகனத்தை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய ஷோரூமில் டி.வி.எஸ். நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விற்பனை, உதிரிபாகங்கள் மற்றும் நவீன சேவை வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.